நடிகர் அஜித்குமார் சமீப காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 62 வது திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படம் பண்ணவும் அஜித் திட்டமிட்டு இருக்கிறார் என தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் யாருக்கோ எழுதப்பட்ட கதையில் அஜித் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்..
சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அமர்க்களம். படத்தில் இவர்களுடன் இணைந்து ரகுவரன், வினு சக்கரவர்த்தி, நாசர், ராதிகா சரத்குமார், அம்பிகா, ரமேஷ் கண்ணா, தாமு மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர். படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.
இந்த திரைப்படத்தை இயக்கிய சரண் அண்மையில் பேட்டி ஒன்றில் இந்த படத்தின் கதை குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. அஜித்தின் கதாபாத்திரமே முதலில் இந்த படத்தில் இல்லை.. நாசரும், ரகுவரனுக்கும் இடையே நடக்கும் சண்டைகளை வைத்தே படத்தைக் கொண்டு போக நினைத்தார் சரண் ஆனால் அவர்கள் இருவருமே அப்பொழுது பெரும் நட்சத்திரமாக இல்லை..
மேலும் இவர்கள் இருவரையும் இணைப்பதற்கான ஒரு விஷயம் படத்தில் தேவைப்பட்டது அதற்காகத்தான் அஜித் கதாபாத்திரத்தை உருவாக்கினார் சரண் சொல்ல போனால் அந்த படத்தில் இறுதியாக தான் அஜித்தை உள்ளே கொண்டுவர முடிவு செய்துள்ளார் ஆனால் அந்த படம் அஜித்திற்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.