சிவாங்கிக்கு டுவிட்டரில் தனது அன்பை வெளிப்படுத்திய அஸ்வின்.! இதோ உருக்கமான பதிவு.

ashwin-and-shivangi

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது அந்த வகையில் ஒன்று தான் குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு பிரபலமடைந்துள்ளதோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இரண்டாவது சீசன் முடிவு பெற உள்ள நிலையில் மூணாவுது சீசன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகர் அஸ்வின். இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பாலான பெண் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு முன்பு அஸ்வின் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் துரு விக்ரமிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.  இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் ஹீரோவாக நடித்து இருந்தார்.ஆனால் எந்த படங்களும் இவருக்கு பெரிதாக பிரபலத்தை தரவில்லை.

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்நிலையில் அஸ்வின் நிகழ்ச்சி முடிய  உள்ள நிலையில் இந்நிகழ்ச்சி பற்றிய தனது நெகிழ்வான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்பது எனக்கு ஒரு ஷோ மட்டுமல்ல என் குடும்பம் இந்நிகழ்ச்சி விரைவில் முடிய போகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.இந்நிகழ்ச்சி தான் எனக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. மேலும் நிகழ்ச்சியுடன் மீண்டும் ஒரு நிமிடம் செலுத்த வேண்டும் என்றால் எங்கு இருந்தாலும் நான் உடனே வந்து விடுவேன். என்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள், நடுவர்கள்,கேமராமேன்கள், எடிட்டர்கள், இயக்குனர்கள் என எனக்காக உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒவ்வொரு ரசிகர்களும் காரணம் நீங்கள் தான் இந்நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வெற்றி அடைய செய்தீர்கள். எனவே உங்களுக்கும் நன்றி. மிகவும் முக்கியமாக சிவாங்கி பற்றி நான் இங்கு கூறியே ஆகவேண்டும்.  இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி தான் என்னை மிகவும் ஊக்கமூட்டினார்.

என்னுடைய அனைத்து வேலைகளுக்கும் துணையாக இருப்பதும் உற்சாகப்படுத்தியது சிவாங்கி தான்.  மேலும் சிவாங்கி ஒரு முறை என்னை மிஸ் பண்ணுவிங்களா என்று கேட்டிருந்தார்.  ஆம் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று கூறியுள்ளார் அஸ்வின்.  அஸ்வினின் இந்த நெகிழ்ச்சியான தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

aswin 2
aswin 2