அஸ்வின் தான் நேற்றைய போட்டியில் எங்களை பொட்டலம் பண்ணி அனுப்பினார்.! NZ வீரர் மார்டின் கப்தில் – வெளிப்படையான பேச்சு.

martin-guptill
martin-guptill

இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு முதலாவதாக நியூசிலாந்துடனான போட்டிகளில் விளையாடி வருகிறது முதலாவது 20 ஓவர் போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டியில் வெற்றி பெற முக்கியமாக இருந்தது ஒரு சிலரே ஆம் அஸ்வின் பந்து வீச்சில் சிறப்பாக செயல்ப்பட்டார். பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுத் தந்தனர். அதிலும் குறிப்பாக அஸ்வின் தான் நேற்றைய ஆட்டத்தின் போக்கை மாற்றினார் என கூற வேண்டும்.

சில வருடங்களுக்கு பிறகு 20 ஓவர் பார்மட்க்கு திரும்பியுள்ள அஸ்வின் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் மிக மிக மிக ரன் விகிதமும் குறைவாக  5.3 வைத்திருக்கிறார் இது மிகப் பெரிய விஷயம். நேற்றைய போட்டியில் அஸ்வின் செப்மன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர்களின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

அதுவே நியூசிலாந்து அணியின் ரன் விகிதத்தை குறைக்க மிகவும் உதவியது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அஸ்வினை பற்றி புகழ்ந்து பேசினார். அவர் தந்திரமான பந்துவீச்சாளர் சரியான லைனில் பந்துவீச கூடியவர் தவறான பந்துகளை அதிகம் வீசமாட்டார்.

ashwin
ashwin

அவர் இதுவரை எனக்கு தவறான பந்துகளை வீசியதே கிடையாது. எப்பொழுதும் விக்கெட் எடுக்கும் முனைப்பிலேயே சரியாக வீசுவார் தனது வேகத்தையும் மற்றும் அதிக மாற்றங்களையும் செய்து பந்து வீசக் கூடியவர். அவரிடம் தப்பிபது மிகவும் கடினம் அவரது பந்தை எதிர்கொண்ட ஒவ்வொரு பேர்ட்ஸ்மேன்னும் அறிவார்கள் என புகழ்ந்து பேசினார்.