குக் வித் கோமாளி அஸ்வினுடன் பிக்பாஸ் பிரபலத்தின் மகள்.! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.

ashwin7

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பப்பட்டது.அந்த வகையில் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது. அந்த வகையில் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கனி வெற்றி பெற்றார்.

அந்த வகையில் சீசன் 2 சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்பது போட்டியாளர்களில் ஒருவர் தான் அஸ்வின். இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம் என உற்சாகப்படுத்தும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் அஸ்வினுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அதோடு இவர் ஆதித்ய வர்மா உள்ளிட்ட இன்னும் சில திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் பணியாற்றிய எதுவும் இவருக்கு சினிமாவில் ஒரு பிரபலத்தை தரவில்லை. ஆனால் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.தொடர்ந்து இவர் பல திரைப் படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

ashwin 1
ashwin 1

இந்நிலையில் அஸ்வின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சாண்டி மகள் லாலுவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.