நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். ஆனால் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் அது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார் சூர்யா விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சூர்யா இதற்கு முன்பு நடித்த பல திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளது அந்த வகையில் சூர்யாவுக்கு மயில் கல்லாக இருந்த திரைப்படம் தான் காக்க காக்க இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் அவர்கள் தான் இயக்கியிருந்தார் 2003 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த காக்க காக்க திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன் டேனியல் பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா அன்புச்செழியன் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்து தூள் கிளப்பி இருந்தார் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது அதுமட்டுமில்லாமல் சூரியாவை அன்புச்செழியன் என பலரும் கூப்பிட ஆரம்பித்தார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பதற்கு மிகப்பெரிய காரணம் ஒன்று இருக்கிறது.
சூர்யா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு மௌனம் பேசியதே, நந்தா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார் இந்த ஒரு நிலையில் கௌதமேனன் மின்னலே என்ற காதல் திரைப்படத்தை முடித்துவிட்டு தன்னுடைய இரண்டாவது திரைப்படமாக போலீசை மையமாக வைத்து காக்க காக்க திரைப்படத்தை எடுப்பதற்கு திட்டம் தீட்டினார். ஆனால் அப்பொழுது யார் காவல் அதிகாரியாக நடிக்க வைக்கலாம் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கதாநாயகனை தேடும் வேட்டையில் கௌதம் மேனன் இருந்தார்.
அப்படி ஒரு நிலையில் கௌதமேனன் சூர்யா அன்புச் செழியன் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை சந்தித்து கதையை கூறியுள்ளார் இந்த அன்புச்செழியன் என்ற காவல்துறை கதாபாத்திரத்தின் கதையைக் கேட்டுள்ளார் சூர்யா ஆனால் இந்த கதை கொஞ்சம் வழக்கமாக காவல்துறை கதையாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்டதாக இருந்தது கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகி இறப்பது போல் இருந்ததால் இந்த கதையில் சூர்யா நடிக்க மறுத்துள்ளார்.
உடனே கௌதம் மேனன் இந்த கதையை ஜோதிகா அவர்களிடம் கூறியுள்ளார் முதலில் ஜோதிகா இந்த கதையில் அஜித், விஜய் ஆகியவர்களை நடிக்க வைக்க அணுகுங்கள் எனக் கூறினார் ஆனால் பின்பு ஜோதிகா இந்த கதை தனக்கு பிடித்திருந்ததாலும் கௌதமேனன் மீது உள்ள நம்பிக்கையாலும் சூர்யாவிடம் ஜோதிகா ஒரே ஒரு வார்த்தை இந்த திரைப்படத்தில் நீங்கள் நடித்து தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
உடனே சூர்யா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் கௌதமேனன் திரைப்படமான காக்க காக்க திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் இருவரும் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார்கள் அது மட்டும் இல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் அன்புச் செழியன் கதாபாத்திரம் இந்த திரைப்படத்திற்கு பிறகு அன்பு செழியன் கதாபாத்திரம் ரசிகர்கலிடையே மிகவும் பிரபலம் அடைந்தது.
சூர்யா தன்னுடைய திரை பயணத்தில் முதன்முதலாக காவல்துறை அதிகாரியாக நடித்த திரைப்படம் காக்க காக்க திரைப்படம் தான் இந்த திரைப்படம் தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. என்னதான் சூர்யா முன்னணி நடிகராக இருந்தாலும் காக்க காக்க திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது