தமிழ் சினிமாவில் மலையாள சினிமாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் ஏராளமாக உள்ளார்கள் அதில் தற்பொழுது பெருமை வாய்ந்த நடிகைகள் பலர் இருந்தாலும் இதற்கு முன்பு தமிழ் ரசிகர்களை தன் பின்னே அலைய வைத்த ஒரு நடிகை என்றால் அது அசின் தான் இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
அதன் பிறகு விஷால் மற்றும் ஷாம் நடித்த உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் நடிகை அசின் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சூர்யா என பலருடனும் நடித்த நமது நடிகை ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்து வந்துள்ளார்.
அந்த வகையில் நமது நடிகை தமிழில் நடித்த கஜினி திரைப்படம் மாபெரும் வெற்றி கண்ட திரைப்படமாக அமைந்தது இன்று திரைப்படத்தை பாலிவுட்டில் அமீர்கான் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி கண்டார். பின்னர் நமது நடிகைக்கு தமிழை விட பாலிவுட்டில் அதிக அளவு வாய்ப்பு கிடைத்தது மட்டுமில்லாமல் தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது.
இதனால் நமது நடிகை சினிமாவில் நடிப்பதையே முற்றிலுமாக தவிர்த்து விட்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நமது நடிகை அதன் பிறகு திரையில் முகம் காட்டுவதை முற்றிலுமாக தவித்துவிட்டார் என்று சொல்லலாம்.
பொதுவாக நடிகை அசினுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது என்னவோ கஜினி திரைப்படத்தின் மூலம் தான் ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை அசின் நிராகரித்துள்ளார் அவை எந்த திரைப்படம் என்றால் சில்லுனு ஒரு காதல் திரைப்படம் தான் இதில் பூமிகா கதாபாத்திரத்தில் முதன்முதலாக அசின் நடிக்க இருந்தார்.
இந்த கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க சூர்யா தான் சிபாரிசு செய்தார் ஆனால் அசினை விட ஜோதிகாவுக்கு இந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் இருந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் அசின் பல மாற்றங்களை செய்தது மட்டுமில்லாமல் பாடலையும் சேர்க்கும்படி செய்தார் ஆனால் கடைசியில் ஒப்புக் கொள்ளாமல் விலகி விட்டார்
இது குறித்து சூர்யா பேசும்பொழுது சிவகாசி மஜா போன்ற திரைப்படங்களை விட இந்த திரைப்படம் அசினுக்கு மிகவும் சிறந்த திரைப்படமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் அவருக்கு பெரும் தொகையை அட்வான்ஸ் ஆக வழங்கப்பட்டது. ஆனால் கடைசியில் மீண்டும் மாற்ற சொல்லி படத்திலிருந்து விலகி விட்டார்.