அஜித் படத்தால் சினிமாவை விட்டு தெறித்து ஓடிய அசின்.! பல வருடங்கள் கழித்து வெளியாக்கிய ரகசியம்.!

ajith
ajith

பொதுவாக கேரளத்தில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கேரளத்தில் இருந்து வரும் பைங்கிளி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அசின் இவர் நல்ல உயரம் அழகு தோற்றம் ஸ்லிம் பிட் லுக் என அறிமுகமானதிலிருந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வந்தவர்.

இவர் ஆரம்பத்தில் பரதநாட்டிய கலைஞராக இருந்தார் 2001 ஆம் ஆண்டு வெளியாகிய நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடித்தது அது மட்டுமில்லாமல் வசூலில் சாதனையும் படைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் அசினுக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தது .

அதேபோல் தமிழில் முதன்முதலாக எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அசின் இந்த பக்கமே திரும்பி பார்க்கவில்லை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தியும் கொண்டார்.

அப்படி இருக்கும் நிலையில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்த அசின் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் பொழுது மிகப்பெரிய சறுக்களை சந்தித்து பட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் அஜித் படம் தான் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யரு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கூறியதாவது அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா 2 திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அசின் என கூறினார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்காக அசினை வளைத்து வளைத்து கிளாமர் உடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். திடீர்னு ஒரு நீச்சல் உடையை கொடுத்து நீங்கள் அணிந்திருக்கும் ஆடையை கழட்டி விட்டு இந்த ஆடையை மாற்றிக் கொள்ளுங்கள் என கொடுத்தார்களாம்.

அந்த ஆடையை பார்த்த அசினுக்கு அதிர்ச்சி அடைந்ததாம் ஏனென்றால் படத்தில் புக் செய்வதற்கு முன்பே இது போல் எதுவுமே சொல்லவில்லை என கூறினாராம் அது மட்டும் இல்லாமல் திடீரென இப்படியெல்லாம் நடிக்க சொல்றீங்க என்னால் இதெல்லாம் செய்ய முடியாது தயவு செய்து ஆளை விடுங்கள் என படத்தின் பாதியிலேயே ஓடிவிட்டாராம்.

உடனே அப்பொழுது உள்ள பத்திரிக்கையாளர்கள் அஜித்திற்கே நோ  சொன்ன அசின், திமிர் பிடித்தவர், தலைக்கனம் ஏறிடுச்சு என கண்ணா பின்னான்னு எழுதி அவருடைய கேரியரே காலி பண்ணிட்டாங்க அதன் பிறகு தான் பாலிவுட் பக்கம் சென்றார். தமிழில் பெரிதாக தனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் யாருமே கொடுக்க முன்வரவில்லை அதனால் பாலிவுட் பக்கம் சென்று திருமணம் செய்து கொண்டு ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.