ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள திரை உலகில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
இதனை தொடர்ந்து அவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் மேலும் இவர் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.
இப்படி சினிமா உலகில் சிறப்பாக வளர்ந்து கொண்டே இருந்த அசின் அவர்கள் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போடவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் ரசிகர்கள் பெரிதும் வருந்தினர். வெகு வருடங்கள் கழித்து திரும்பி மீண்டும் தற்போது சினிமா உலகில் நடிக்க அடியெடுத்து உள்ளார்.
இதனை முன்னிட்டு விளம்பரப் படங்களில் தனது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை கொடுத்துள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.