சின்ன பசங்ககிட்ட இப்படியா நடந்துகொள்வது அசிமை கழுவி ஊற்றும் நெடிசன்கள்..

asim-2
asim-2

சின்னத்திரை நடிகர் அசீம் அன்போடு பூங்கொத்து கொடுக்க வந்த சிறுவர்களை கண்டுக்காமல் புறக்கணித்த நிலையில் இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த நெட்டிசன்கள் அசீமை திட்டி தீர்த்து வருகின்றனர். அதாவது சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் அசீம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல்  மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் பிறகு ஆண்டாள் அழகர் சீரியல் இரண்டாவது பாகத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து நடனம் ஆடுவது, தொகுப்பாளர், சீரியல்களின் நடிப்பது என பல திறமைகளை கொண்ட இவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய இவரை ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் எதிர்த்து வந்தார்கள் இருந்தாலும் அனைத்து எதிர்ப்புகளுக்குப் பிறகு பிக்பாஸ் 6வது நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார்.

asim
asim

இதனை பலரும் எதிர்த்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் மலேசியாவிற்கு ஒரு கடை திறப்பு விழாவிற்காக அங்கு ஏராளமான மக்கள் இணைந்து அசீமை வரவேற்று இருந்தார்கள். அப்பொழுது அங்கு இரண்டு சிறுவர்கள் அசீமை வரவேற்க அன்புடன் பூங்கொத்துடன் நின்று கொண்டிருக்க ஆனால் அதனை கண்டுகொள்ளாதது போல் அசீம் நிற்கிறார்.

asim 1
asim 1

மேலும் அந்த சிறுவர்களை புறக்கணித்துவிட்டு பூங்கொத்தை வாங்காமலே அசிம் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த நெட்டிசன்சகள் இதுதான் மக்கள் நாயகனா? நீங்கள் இன்னும் திருந்தவே இல்லையா? என பயங்கரமாக திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.