மெகாஹிட் சீரியலில் குக் வித் கோமாளி அஸ்வின்.! அதுவும் விஜய் டிவியில் கவனித்தீர்களா.!

ashwin
ashwin

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ட்ரென்டிங்கான நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருப்பது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி முதல் இரண்டு சீசன்களும் முடிந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் 9 பேர் போட்டியாளர்களாக பங்கு பெறுவார்கள்.

இந்நிலையில் இரண்டாவது சீசனில் அந்த ஒன்பது போட்டியாளர்களில் ஒருவராக பங்குப்பெற்று பிரபலமடைந்தவர் நடிகர் அஸ்வின். இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் எந்த திரைப்படங்களும் சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை.

பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்ததோடு தொடர்ந்து நான்கு திரைப் படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நினைக்கத் தெரிந்த மனமே, இரட்டைவால் குருவி உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகனாக நடித்து சின்னத்திரையில் பிரபலமடைந்தார்.ஆனால் இதற்கு முன்பு ஆபிஸ் சீரியலில் நடித்துள்ளார். அவ்வபொழுது தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகியாக நடித்து வரும் பவித்ராவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.