por thozhil : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது பிரபலம் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து போர் தொழில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
போர் தொழில் படத்தினை புது முக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ஹீரோயினாக நிகிலா விமல் நடித்திருக்கும் நிலையில் இவர்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிபதிவு செய்திருக்கிறார்.. மேலும் ஸ்ரீஜித் சராங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
போர் தொழில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் அதனை அடுத்து ஓடிடியில் வெளியிட படக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே அதற்கான ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு இருக்கும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி பிரபல ஓடிடித் தளமான சோனி லைவ்-ல் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தாலும் போர் தொழில் பட குழுவினர்கள் மற்றும் சோனி லைவ் தளம் மௌனமாக இருந்து வருகின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போர் தொழில் படத்தினை APPLAUSE என்டர்டைன்மென்ட்- E4 எக்ஸ்பிரிமெண்ட்- EPRIUS ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அசோக் செல்வன் போர் தொழில் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.