திருமண அழைப்பிதழை வெளியிட்ட அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்.! எப்பொழுது எங்கு தெரியுமா.?

ashok selvan
ashok selvan

Actor Ashok Selvan: நடிகர் அசோக் செல்வனுக்கும் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இவர்களுடைய திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அசோக் செல்வன் தொடர்ந்து காதல் கதையம்சமுள்ள  திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த அசோக் செல்வன் பிறகு குறும்படத்தை இயக்கி எழுத தொடங்கினார். இதனை அடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே போன்ற தரமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தந்து வருகிறார். அப்படி முக்கியமாக ஓ மை கடவுளே  திரைப்படம் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று தந்தது.

இவ்வாறு இதனை அடுத்து பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நித்தம் ஒரு வானம், போர் தொழில் போன்ற படங்கள் வெளியாகிய நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ashok selvan
ashok selvan

இவர்கள் இருவரும் இணைந்து ப்ளு ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்த வரும் நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததால் அடுத்த மாதம் 19ஆம் தேதி அன்று திருநெல்வேலியில் அருண்பாண்டியன் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது என்றும் இவர்களுடைய திருமண அழைப்பிதழ் புகைப்படம் வெளியாகி உள்ளது.