காதலுக்கும் வயதுக்கும் வேலை இல்லை.. அவரவர் வேலையை பாருங்கள் என 60 வயதில் 2வது திருமணம் செய்துக் கொண்ட வில்லன் நடிகர் பேட்டி..

ashish-vidyarthi-06
ashish-vidyarthi-06

சினிமாவை பொருத்தவரை ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டு, மூன்று திருமணம் செய்து வருகின்றார்கள். மேலும் வயதான பிறகும் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அப்படி தற்பொழுது தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு போன்ற ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.

குணசத்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்து பிரபலமானார் அப்படி தமிழில் தரணி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தில் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ரஜினியின் பாபா, அர்ஜுனின் ஏழுமலை, விஜய்யின் பகவதி, தமிழன், கில்லி என ஏராளமான திரைப்படங்களில் வில்லனாக நடித்து தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவ்வாறு வயதான பிறகும் மவுசு குறையாமல் இருந்து வரும் நிலையில் இந்த வருட மட்டுமே ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு பிசியாக இருந்து வரும் ஆஷிஷ் சமீபத்தில் தனது இரண்டாவது திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தி இருந்தார். ஆனால் திருமணத்தின் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் பலரும் விமர்சனம் செய்துக் வருகின்றனர்.

இவர் தனது முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகிறார். எனவே இதன் காரணமாகத்தான் ரூபாலி என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியுடன் ஆட்டம் பாட்டம் என மிகவும் மகிழ்ச்சியாக இருந்த இவருடைய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பரவியது.

காசு பணம் இருந்தால் 60 வயதில் கூட ஆட்டம் போடலாம் போல என ஏராளமானவர்கள் சர்ச்சையை கிளப்பினர் இப்படிப்பட்ட நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் 60 வயதில் உனக்கு திருமணம் தேவையா முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டாயா என பலரும் பலவிதமான கேள்விகளை கேட்கின்றனர்.

அதிலும் இந்த வயதில் இன்னொரு துணை கேட்கிறதா என்றும் கேள்வி கிண்டல் செய்கிறார்கள். எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்காது வேறு வேறு நம்பிக்கையோடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்க வேண்டும் என்பதில் ஆணித்தனமாக இருக்கிறார்கள். அப்படித்தான் 22 வருடத்திற்க்கு முன்பு திருமணம் செய்து கொண்டு முதல் மனைவிக்கும் எனக்கு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம் அதன் பிறகு இப்பொழுது இரண்டாவது எனக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு இப்பொழுது 57 வயது தான் எல்லோரும் நினைப்பது போல எனக்கு இன்னும் 60 வயது ஆகவில்லை. காதலில் வயதுக்கு வேலை இல்லை இருவரும் சந்தோஷமாக இருந்தால் போதும் ஆகையால் என்னுடைய இரண்டாவது திருமணத்தை வைத்து கடலை போடுவதை நிறுத்திவிட்டு அவரவர் தங்கள் வேலையை பார்த்தால் போதும் என விளக்கம் அளித்துள்ளார்.