கமலஹாசன் சார் இப்படி செய்வார் என்று நான் நெனச்சு கூட பாக்கல.! பாபநாசம் படம் நடிகை அதிரடி பேட்டி.!

asha sarath
asha sarath

Asha Sharath : ஆஷா சரத் மலையாள சினிமாவில் நடித்து வந்தவர் இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞர் ஆவார் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்து வந்தவர் சினிமாவில் முதன்முதலாக தன்னுடைய பயணத்தை 2012 ஆம் ஆண்டு ஃப்ரைடே என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர் தமிழில் முதன்முதலாக ஆஷா சரத் பாபநாசம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் கமலஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில், கலாபவன் மணி, ஆனந்த் மகாதேவன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை ஜித்து ஜோசப் என்பவர் தான் எழுதி இயக்கி இருந்தார்.

பாபநாசம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் ஆஷா சரத் தமிழில்  அறிமுகமான முதல் திரைப்படம் இவருக்கு வில்லி கதாபாத்திரமாக இருந்ததால் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.

பாபநாசம் திரைப்படம் ஒரு ரீமேக் திரைப்படம் தான் மோகன்லால் நடித்த திருஷ்யம் திரைப்படத்தை தான் தமிழில் பாபநாசம் என்று ரீமேக் செய்தார்கள் இந்த திரைப்படம் ஹிட் அடித்தது மலையாளத்தில் திருஷ்யம் திரைப்படத்தில் ஆஷா சரத் தான் வில்லி இவரின் நடிப்பை பார்த்து கமலஹாசன் வியந்தார் அதனால் கமல் தன்னுடைய தூங்காவனம் என்ற திரைப்படத்தில் கமலின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நடிகை ஆஷா சரத் இதனைத் தொடர்ந்து அன்பறிவு என்ற திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதேபோல் ஆஷா சரத் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ஃபிலிம் ஃபேர், விகடன், சைமா அவார்ட்ஸ் என பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளார் மேலும் இவர் நடிப்பை தாண்டி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி என பல நடனங்களை முறையாய் பயிற்சி பெற்ற நடன கலைஞராக ஆவார். தற்பொழுது இவருக்கு வயது 48 ஆனாலும் இந்த வயதிலும் தனக்கு வித்தியாசமான ரோல்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் கமலஹாசன் உடன் பாபநாசம் திரைப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் அவர்களுடன் பாபநாசம் திரைப்படத்தில் நடித்த உடனே அடுத்ததாக தூங்காவனம் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அது எப்படி அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்த ஆஷா சரத் நான் நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் கமலஹாசன் சார் ஒரு நடிப்பு அரக்கன் என்று ஆனால் உண்மையில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது தான் எனக்கு தெரிந்தது.

எனக்கு ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குனர் விளக்கி சொன்னாலும்  கமலஹாசன் சார் தெளிவாக விளக்கி சொல்லிக் கொடுப்பார் இயக்குனர் சொல்வதைக் காட்டிலும் கமலஹாசன் சார் அந்த காட்சியை மிகவும் உன்னிப்பாக எடுத்துக் கூறுவார் அவர் சொல்வதைக் கேட்டு நடித்தல் ஒரே டேக்கில் முடித்து விடலாம் பாபநாசம் திரைப்படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு அவரே கூப்பிட்டு தூங்காவனம் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார் கமலஹாசன் சார் இப்படி செய்வார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை அது ஒரு கனவு போல இருந்தது என அந்த பேட்டியில் ஆஷா சரத் கூறியுள்ளார்.