தப்பு தப்பாக தமிழை எழுதி கொலை வாங்கும் அசீம்.! புகைப்படத்தை வெளியிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்..

bigg-boss-67
bigg-boss-67

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் தொடர்ந்து சண்டை சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் வாரம் வாரம் டாஸ்க்கள் நடைபெறுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்பொழுது நிகழ்ச்சி 46 நாட்களை கடந்துள்ள நிலையில் 21 போட்டியாளர்களில் 6 போட்டியாளர்கள் வெளியாகி தற்பொழுது 15 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

மேலும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் தொடர்ந்த பல விதமான டாஸ்க்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் கோர்ட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீதான குற்றங்களை குறித்து விவாதம் செய்ய வேண்டும் அந்த வகையில் அசீம் வக்கீலாக வாதாடி வருகிறார்.

அசீம் தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி வரும் நிலையில் கமல் அசீமை வெளுத்து வாங்கினார் மேலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் வாரம் வாரம் சிக்கி வருகிறார் அசீம் மேலும் சமீப காலங்களாக  கமல் சொன்னபடி இருந்து வந்த இவர் கோர்ட் டாஸ்க்கில் அசிம் எழுதிய கடிதம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதாவது அசிம் கையெழுத்து எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று பலரும் புகழ்ந்து வந்த நிலையில் அதனை படித்த பிறகுதான் அவருடைய தமிழ் படிசை தெரிய வந்துள்ளது எப்பொழுதுமே அசின் தமிழ் மீது அதிக ஆர்வம் பற்றுடையவர் நான்தான் தமிழில் அதிகம் பேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறார் ஆனால் அந்த கடிதத்தில் நிறைய எழுத்து பிழைகள் இருக்கின்றது.

அந்த வகையில் சொன்னாருக்கு சென்னார், அபாண்டமாக, கழுப்புணர்ச்சி போன்ற பல வார்த்தைகள் தவறாக எழுதி இருக்கிறார் இவ்வாறு இதனை படித்து பார்த்த நெட்டிசன்கள் இதுதான் தமிழ் மீது இருக்கின்ற பற்றா இப்படித்தான் எழுதுவதா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.