விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியல் வெளியாகுவது வழக்கம் மேலும் நாமினேஷன் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகளை பெற்ற ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறுவார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் 4 பேர் வெளியாகி தற்பொழுது 17 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் சாந்தி இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் இவரை தொடர்ந்து அசல் கோளாறு, ஷெரினா ஆகிய மூவரும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்றிருந்தனர்.
இவர்களை தொடர்ந்து ஜிபி முத்து தானாகவே முன்வந்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறினார். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் மற்றும் மகேஸ்வரி ஆகியோர்கள் நாமினேஷன் பட்டியலில் சிக்கி உள்ளார்கள்.
இந்த ஏழு பேரில் மூன்று பேர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். அதில் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கும் அடிப்படையில் தனலட்சுமி மற்றும் ராம் இவர்கள் இருவரை விடவும் மிக குறைவான வாக்குகளை மகேஸ்வரி பெற்றிருக்கிறார். மேலும் அசீம் தான் அதிகமாக வாக்குகள் பெற்று முதலிடத்திலும் விக்ரமன், ஏடிகே, ஆயிஷா ஆகியவர்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்றுள்ள மகேஸ்வரி, ராம் மற்றும் தனலட்சுமி ஆகிய மூவரில் யார் வெளியேறுவார் என்பது ஞாயிற்றுக்கிழமை தான் தெரியவரும் ஆனால் இவர்கள் மூன்று பேருமே சிறிதளவு வாக்குகள் வித்தியாசத்தில் தான் இருக்கிறார்கள் எனவே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.