சத்தமே இல்லாமல் மயங்கி விழுந்த அசீம்.! பதற்றத்தில் பிக்பாஸ் வீடு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் அசீம் இன்று திடீரென மயங்கி விழுந்ததைப் பார்த்து ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் பதறிப் போய் உள்ளனர் அது குறித்த புரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் தான் அசிம் இவர் தொடங்கிய முதல் நாளிலிருந்து வாரம் தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இவரோடு இருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரும் இவருக்கு எதிராக இருந்து வருகிறார்கள்.

பலரையும் இவர் தரகுறைவாக பேசி வந்த நிலையில் அசிமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கூறி வந்தார்கள். இதன் காரணமாக கமலஹாசன் அசீமை தொடர்ந்து இரண்டு வாரங்கள் கண்டித்து வந்த நிலையில் பிறகு இரண்டு வாரங்களாக கமலஹாசனிடம் பாராட்டைப் பெற்று வந்தார் இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் மீண்டும் அவருடைய சுய ரூபத்தை காட்ட தொடங்கினார் எனவே இந்த வாரம் முழுவதும் அவருடைய நடவடிக்கைகள் அனைவருக்கும் முகம் சுளிக்க வைத்தது.

மேலும் இந்த வாரம் இவர்தான் இந்த வீட்டின் கேப்டன் எனவே அவரை எலிமினேட் கூட செய்ய முடியாத நிலையில் ரசிகர்கள் கடுப்பிலிருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் இரண்டு டீம்களாக பிரிந்து ஏலியன், பழங்குடியினர் என நடைபெற்று வருகிறது. அதில் பல சண்டைகள் நடைபெற்ற நிலையில் அமுதவாணனிடம் பெரிதளவில் அசிம் சண்டை போட்டார்.

மேலும் அவருடைய கழுத்தையும் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது எனவே இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என கூறி வந்த நிலையில் தற்போது திடீரென அசீம் மயங்கி விழும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கார்டன் ஏரியாவில் உள்ள ஷோபாவில் அமர்ந்து கொண்டு கதிரவனிடம் பேசிக் கொண்டிருக்கும் அசிம் திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து பதறிப்போன போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு முதலுதவி அளிக்கின்றனர் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் பதறி உள்ளார்கள்.