தகாத வார்த்தையில் பேசி சீரியல் நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட அசீம்.!

poove-unakaha
poove-unakaha

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் அறிமுகமாகி தற்பொழுது 17 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் சாந்தி, ஜி.பி முத்து, அசல் கோளாறு, ஷெரினா ஆகிய நான்கு போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

தற்பொழுது அந்த 17 போட்டியாளர்களில் ஒருவராக அசீம் இருந்து வருகிறார். இவர் தமிழ் சின்னத்திரையில் உள்ள ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானார் அதுவும் முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்று தந்தது.

மேலும் இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கும் இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அனைவரையும் மதிக்காமல் ஓவராக பேசி வந்ததால் கமல் அவர்களால் கண்டிக்கப்பட்டார். மேலும் கமல் அவர்கள் இவருக்கு கூறிய அறிவுரையின்படி அசீம் அதனை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக் கொண்டார் இவர் அமைதியாக இருந்தால் மற்ற போட்டியாளர்கள் இவரை ஏளனப்படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் அவர்கள் அசீமை பாராட்டினார்கள். இந்நிலையில் அசீம்  கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கதாநாயகியை தகாத வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார்.

எனவே அவரை மட்டும் இன்றி தன்னுடன் நடித்த இன்னும் சில நடிகைகளையும் தகாத முறையில் பேசி இருந்ததால் அந்த அனைத்து நடிகைகளும் அசின் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அப்படி கேட்டால் மட்டுமே சீரியலில் நடிப்போம் என்றும் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் அசீம்க்கு ஆதரவாக பேசியுள்ளார் இருந்தாலும் அசீம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் உறுதியாக கூறிய நிலையில் அதன் பிறகு அனைத்து பெண்களிடமும் அசீம் அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.