வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஊர்வசி இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
ஊர்வசி தமிழ் திரைப்படமான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்த ஊர்வசி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் பரவி இருந்தார்.
இவ்வாறு வலம் வந்த ஊர்வசி திடீரென்று சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார் தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து அம்மா கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.
அதைப் போலவே நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு தாயாக நடித்து அசத்தி இருப்பார்.
இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இவர் பிரபலமாகி வருகிறார் ரசிகர்கள் பலரும் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.