ரஜினி மற்றும் அஜித் தமிழ் சினிமா தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்க நினைகிறார்கள்.! கொந்தளித்த நிறுவனம்!!

ajith-rajini
ajith-rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித். தற்பொழுது ரஜினிகாந்த் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 படமான அண்ணாத்த என்ற படத்தில் நடித்துவருகிறார். இவர் இதற்கு முன்னர் தர்பார் மற்றும் பேட்ட போன்ற வெற்றி படங்களை கொடுத்த நிலையில் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினி பற்றி பெப்சி உறுப்பினர்கள்  பேசியது தற்போது அவர் மீது மிகபெரிய சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் தமிழ் சினிமாவில் கமிட்டாகி நடித்து வரும் ரஜினி அவர்கள் சூட்டிங் மட்டும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு எடுக்கப்படுகிறது. இதனால் தமிழ் சினிமாக்களில்  தமிழ்சினிமா யூனியன் ஆட்களை வைத்து பயன்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏனென்றால் இந்த தொழிலை நம்பி பல டெக்னீஷியன்கள் மற்றும் உதவியாளர்கள் தமிழ் சினிமாவையே நம்பி இருக்கிறார்கள் அவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்பது சினிமா தொழிலாளர் கூட்டமைப்பில் பெப்சி போட்டிருக்கும் சட்டம்.

மேலும் கூறியது முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் போன்றவர் பெரிய பட்ஜெட் படங்கள் மும்பை மற்றும் பிற மாநிலங்களில் எடுக்கப் படுகின்றனர் இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என கூறிவருகின்றனர். தமிழ் சினிமா துறை முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டில் படங்களை எடுத்தால் நமக்கு வேலை கிடைக்கும் என தமிழ் சினிமா உறுப்பினர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் பெப்சி உறுப்பினர்களும் தற்பொழுது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

தற்பொழுது அஜித்தின் வலிமை பட சூட்டிங் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையை முதலில் அஜித்திடம் சென்று கூறி உள்ளனர். இதனைக் கேட்ட அவர் அடுத்த கட்டமாக நாங்கள் சென்னை வர உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. பெப்சி அமைப்பினர் அங்கு சென்று நடந்த பிரச்சனையை கூறியுள்ளனர் அதற்கு பதிலளித்த படக்குழுவினர் தமிழகத்தில் நடத்தினால் ரசிகர்கள் அன்பு தொல்லை தாங்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பெப்சி அமைப்பினர் எனக்கு விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தை சென்னையில் எடுத்துக் வருகிறது. அங்கெல்லாம் ரசிகர்கள் தொல்லைகள் மற்றும் அன்புகள் இல்லையா என கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியது இப்போது விஜய் அவர்கள் தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது எனவும் தெரிவித்தனர். இந்த பிரச்சனை தீவிரம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.