Kausalya : கவர்ச்சி காட்டாத நடிகைகளில் ஒருவர் கௌசல்யா இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழ் பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வெற்றி அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. தற்பொழுது ஹீரோயின்னாக நடிக்கவில்லை..
என்றாலும் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தென்பட்டு வருகிறார் 43 வயதாகும் இவர் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது இது குறித்து கேட்டால் எனக்கு பொருத்தமான நபரை பார்க்கவில்லை என கூறிவிடுவார்.
அதையும் தாண்டி கேட்டால் எங்க அம்மா அப்பா உடன் இருந்து பழகி விட்டேன். அவர்களை பிரிந்து என்னால் இருக்க முடியாது நானும் என்னை பிரிந்து அவர்களால் இருக்க முடியாது நான் இப்படியே இருந்து விடுவேன் என கூறுகிறார். இந்த நிலையில் கௌசல்யா பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார்.. விஜய் நடித்த பிரியமுடன் படம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் விஜய் மீது கிரஷ் இருக்கு என தெரிவித்தார். முதலில் விஜயை நேருக்கு நேர் படத்தின் ஷூட்டிங்கில் பார்த்தேன் அப்பவே தெரிந்துவிட்டது.
அவர் ரொம்பவும் பணிவான மனிதர் என்று எனக்கு டயலாக் வராது அதனால் நான் நிறைய டேக் வாங்கினாலும் அவர் என்னை திட்ட மாட்டார் சலித்துக் கொள்ளவும் மாட்டார் எனக்கு உதவி செய்வார். ஒருமுறை நானும், விஜய்யும் டயலாக் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தோம் விஜய் சத்தமாக டயலாக் சொல்லி ப்ராக்டிஸ் செய்வார் நான் மனசுக்குள்ள ஈஸ்வரி பிராக்டி செய்வேன்.
அப்பொழுது இயக்குனர் வசந்த் சார் என்னிடம் சொன்னார் விஜய்யை பார்த்து அதே போல் ப்ராக்டிஸ் பண்ணுங்க அப்பொழுது உங்களுக்கு டயலாக் சரியாக வரும் என்று சொன்னார் அவரை போல பிராக்டிஸ் செய்து பிறகு தான் எனக்கு டயலாக் சரியாக வர ஆரம்பித்தது என கௌசல்யா தெரிவித்தார்.