இப்போதைக்கு அவர் தான் நம்பர் ஒன் ஹீரோ.. வாரிசு பட நடிகர் ஷாம் கலக்கல் பேச்சு.!

vijay-sham-ajith
vijay-sham-ajith

தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் ஷாம் முதலில் தமிழில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் 12 என்ற திரைப்படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் முதல் படத்திலேயே சிம்ரன் ஜோதிகா போன்ற டாப் நடிகைகளுடன் நடித்து அசத்தினார்.

அதன் பிறகு நடிகர் ஷாம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, பாலா, இயற்கை போன்ற தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்க்கு மேல் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் அவரே முன்வந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ரெடி ஆனார்.

இப்போ ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஷாம் தொடர்ந்து விஜய் குறித்தும் வாரிசு திரைப்படம் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இன்று விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என்று பேசிய ஷாம் அஜித் குறித்து பேசும் போது…

மற்ற நடிகர்களை போல் தலைக்கு டை அடித்துக் கொள்ளாமல் தனக்கென தனி பாணியை வைத்து இருப்பது தான் அஜித் சார் உடைய நம்பிக்கை. இதுதான் அஜித் சார் என்று கூறினார் மேலும் அவர் விஜய் ஆப் ஸ்கிரீன் ஆன் ஸ்கிரீனில் எப்படி இருப்பார், வம்சி உடைய இயக்கம், தில்ராஜு என படக்குழுவினர் அனைவர் பற்றியும் புகழ்ந்து பேசி இருந்தார் நடிகர் ஷாம்.