ரோகித் ஷர்மா கேப்டன்னாக இருக்கும் வரை வெற்றி நம் பக்கம் – கோலி இல்லாத நேரத்திலேயே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.? கங்குலி அதிரடி

kohli-and-ganguly
kohli-and-ganguly

20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில்  இருந்து கோலி விலகியதை அடுத்து பிசிசிஐ ரோகித் ஷர்மாவுக்கு அந்த கேப்டன் பொறுப்பை கொடுத்து அழகு பார்ப்பது அதற்கு ஏற்றார்போல ரோகித் சர்மாவும் நியூசிலாந்து இடையிலான மூன்று 20 ஓவர் போட்டியிலும் 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை பெற்று தந்தார்.

இந்த நிலையில்  வெள்ளை பந்தில் இரண்டு கேப்டன்கள் இருந்தால் சரிவர இருக்காது என பிசிசிஐ நிர்வாகிகள் பலர் கூற இதனை அடுத்து ஒருநாள் கேப்டன் பொறுப்பை விராட் கோலி இடம் இருந்து பிடுங்கி ரோகித் இடம் கொடுக்கப்பட்டது. ஒருநாள் கேப்டன் பொறுப்பை கோலியி டம் இருந்து பறித்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இருப்பினும் வேறு வழியில்லாமல் பிசிசிஐ இதை செய்துள்ளது.

ஒரு சிலருக்கு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் விராட் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது BCCI தலைவருமான கங்குலி இது குறித்து பேசி உள்ளவர். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார் ரோகித்சர்மா அதுமட்டுமின்றி  மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது அதோடு மட்டுமல்லாமல் ஆசிய கோப்பை இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி உள்ளார்.

கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதில் அவரது திறமையை தெரிகிறது. அதுவும் விராட் கோலியை இல்லாமல் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்று தந்துள்ளார் அதனால் ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என சௌரவ் கங்குலி பேசி உள்ளார்.