துணிவா, வாரிசா .? இவருடன் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை என பரபரப்பை கிளப்பிய ஆர்யாவின் முன்னாள் காதலி…

arya abarnathi
arya abarnathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா இவர் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவர தயாராகி வருகிறது. மேலும் இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் ஆர்யாவிற்கு பேரும் புகழும் பெற்று தந்தது.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய திருமணத்திற்காக பெண்கள் தேர்வு செய்ய பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது 16 பெண்கள் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர்.

அந்த பதினாறு பெண்கள் ஆர்யா மீது தீராத காதலில் இருந்தார்கள் அவர்களில் ஒருவர் தான் நடிகை அபர்ணதி. இவர் ஆர்யாவிற்காக தனது இணையதள கணக்கிற்கு abarnathi-6ya என்று பெயரை மாற்றிக்கொண்டார். இப்படி ஆர்யா மீது தீராத காதல் வைத்திருந்த அவர் தற்போது வரையிலும் அந்த பெயரை மாற்றாமல் இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த செய்தி அபர்னதிக்கு தெரியவே அதிர்ச்சியாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை அபர்னதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெய்ல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதையும் பெற்றார்.

இந்த நிலையில் அபர்னதியை சமீபத்தில் பத்திரிகையாளர்கள் ஜனவரி 12ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியாகிறது இதில் எந்த படத்தை பார்ப்பீர்கள் என்று கேட்டுள்ளனர் அதற்கு அவர் நான் துணிவு படத்தை தான் பார்ப்பேன் என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு ஆர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு ஆர்யாவுடன் நடிக்கணும் என்று எனக்கு விருப்பமே இல்லை என்று கூறிவிட்டார்.