புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஆர்யா.! சார்பட்டா பரம்பரை படம் போல இருக்குமா.. என கேட்டுக்கும் ரசிகர்கள்.?

ARYA
ARYA

நடிகர் ஆர்யா நடிப்பில் மிரட்ட அதித திறமையை வைத்து இருந்தாலும் சமீப காலமாக அவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறவில்லை காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஆக்சன் மற்றும் காதல் சம்பந்தப்பட்ட படங்களால் அவர் குறிப்பிட்ட வெற்றியை அடைய முடியாமல் தட்டு தடுமாறினார்.

அதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள விரும்பிய ஆர்யா பா ரஞ்சித்தை அணுகினார். இயக்குனர் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை சொல்ல அதற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் இந்த படத்தை ரசிகர்கள் தொடங்கி சினிமா ஆர்வலர்கள் பலரும் கொண்டாடி தீர்க்கின்றனர் இந்த படத்தின் மூலம் ஆர்யாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல படவாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் கூறுகின்றனர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா, விஷாலுடன் இணைந்து “எனிமி” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதற்கிடையே நடிகர் ஆர்யா வெப்சீரிஸ் ஒன்றிலும் தலை காட்டி நடித்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸ்சும் அமேசன் பிரைம் மில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் ஆர்யாவின் ஒவ்வொரு அதுபோலவே பார்க்க ஆசைபடுகின்றனர். அதனால் இந்த வெப்சீரிஸ் அப்படி இருக்குமா கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர் ரசிகர்கள். இதையும் நிச்சயம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.