“சார்பட்டா பரம்பரை” படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்தது.. இவரா.? அதிர்ச்சியான ரசிகர்கள்.! சூப்பர் தகவல் இதோ.

sarpatta-paramparai

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல்வேறு திரைப் படங்கள் வெளிவந்தாலும் சமீபகாலமாக மக்களின் மனதை கவர்ந்த திரைப்படங்கள் எதுவும் வரவில்லை என்ற கவலையில் இஐந்து வந்த மக்களுக்கு சிறப்பான விருந்தை இயக்குனர் பா ரஞ்சித் கொடுத்தார்.

நடிகர் ஆர்யாவை வைத்து “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் படத்தின் கதைகளம் மற்றும் அதில் நடித்தவர்களின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் இந்த திரைப்படம் பட்டிதொட்டியெஙகும் சென்று வெற்றியை ருசித்து வருகிறது.

இந்த படத்தில் ஜான் கோகின், பசுபதி, சபீர், ஆர்யா, கலையரசன், துஷாரா விஜயன் போன்றவர்களின் நடிப்பு உச்சத்தில் இருந்தது. இந்த கதா பாத்திரங்களை தற்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கொண்டாடுவதோடு தனது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் தந்தை கதாபாத்திரத்திம் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் படம் முழுக்க முக்கியமான கதாபாத்திரமாகவே இருந்தது இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர் யார் தெரியுமா.. தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த கிஷோர் தான் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்துள்ளார்.

இவர் இதற்கு முன்பாக ஆடுகளம், வடச்சென்னை, பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிஷோர் இந்த திரைப்படத்தில் இன்னும் முக்கியமான ரோல் கொடுத்து இருந்தால் அவரது நடிப்பு வேற ஒரு லெவெலில் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

kishore
kishore