அண்ணன் தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற ஆர்யா-நயன்தாரா.! எந்த திரைபடத்தில் தெரியுமா.?

aariya nayanthra
aariya nayanthra

தமிழ் திரைவுலகில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்துடன் வாழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரை மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வர முடியும் ஆனால் அனைத்தையும் உடைத்து தற்பொழுது தமிழ் சினிமாவில்  நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் நயன்தாரா.

சினிமாவில் ஒரு அங்கமாக இருந்து வரும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதோடு இளம் நடிகைகள் மற்றும் முன்னணி நடிகைகள் என அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.

முக்கியமாக  தமிழ் சினிமாவில் அதிகம் வாங்கும் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் கலக்கி வரும் இவர் நடிப்பில் இறுதியாக காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.இந்நிலையில் இவருக்கு விரைவில் விக்னேஷ் சிவனுடன் திருமணமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் ஆர்யா மற்றும் நயன்தாரா இருவரும் ஒரு திரைப்படத்தில் அண்ணன் தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று உள்ளார்கள் ஆனால் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது அதனை பற்றிய தகவல் தானே தளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா மற்றும் ஆர்யா இருவரின் கூட்டணியிலும் பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.  இப்படிப்பட்ட நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அரண்மனை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள்தானாம்.aranmanai

சுந்தர் சி நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும் அவருக்கு தங்கையாக நடித்த ஆண்ட்ரியா கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்க இருந்தார்களாம்.  ஆனால் சில பிரச்சனைகளால் இவர்களால் நடிக்க முடியாமல் போனதாக சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது.