Raja Rani first actor choice : தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி விட்டு முன்னணி இயக்குனர் அந்தஸ்தை பிடித்தவர் அட்லி, இவர் தமிழில் இதுவரை நான்கே நான்கு திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஆனால் 30 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.
தளபதி விஜய்யை வைத்து இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த மூன்று திரைப்படங்களும் மெகா ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததுதான், அட்லி திரைப்படம் என்னதான் ஹிட்டானாலும் அவரின் படத்திற்கு பல விமர்சனங்கள் எழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அதேபோல் அட்லீ ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் தயாரிப்பு தரப்பிலிருந்து அட்லி மீது கடுப்பாக தான் இருப்பார்கள், ஏனென்றால் அட்லீ சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்வதாக அட்லி மீது பலரும் புகார் கூறியுள்ளார்கள், அதனால் அட்லீ வைத்து இனி படம் எடுக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன் வராது என கூறப்படுகிறது.
இப்படியிருக்க அட்லி முன்பு செய்த சூழ்ச்சி தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அட்லீ முதன்முதலில் ஆர்யாவை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கினார், இந்த திரைப்படம் மணிரத்தினத்தின் மௌனராகம் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என பலரும் புகார் கூறினார்கள்.
இந்த திரைப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் ஆகியோரும் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது, ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அட்லியின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன் தான், சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் திரைப்படத்திற்கு பிறகு அட்லி சிவகார்த்திகேயனை வைத்து தான் இந்த திரைப்படத்தை இயக்க இருந்தாராம்.
ஆனால் ஒரு சின்ன சான்ஸ் கிடைத்ததும் ஆர்யாவுடன் ராஜா ராணி கதையைக் கூறி ஒப்புதல் வாங்கி விட்டார், ராஜா ராணி கதைக்குள் பெரிய நடிகர்கள் வந்ததும் சிவகார்த்திகேயனை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தூக்கி எறிந்து விட்டாராம், இதனால் செம டென்ஷனான சிவகார்த்திகேயன் இனி உன் திரைப்படத்தில் நடிக்கவே மாட்டேன் என சபதம் செய்து விட்டாராம்.
குறும்படம் எடுக்கும் பொழுது அட்லி மற்றும் சிவகார்த்திகேயன் நண்பர்களாக இருந்தவர்கள் ஆனால் இப்பொழுது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இல்லை, ஆனாலும் நண்பன் என்று தெரிந்தும் அட்லி சிவகார்த்திகேயனின் முதுகில் குத்தியது கொஞ்சம் ஓவர் தான் என கோலிவுட் வட்டாரத்தில் அரசல்புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.