ஒரு தரமான படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் அதைத்தாண்டி சினிமா பிரபலங்களும் வல்லுநர்களும் அதை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை கொண்ட்டாடுவர்கள். அனால் சமீபத்தில் தரமான படங்கள் வரவில்லை என ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் கதறிய நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நேற்று சார்பட்டா பரம்பரை படம் OTT தளத்தில் வெளியாகி அனைவருக்கும் விருந்து படைத்தது.
இந்த படத்தில் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர் ஆனால் அந்த கதாபாத்திரங்களுக்காக அவர்கள் பல மாதங்களாக கஷ்டப்பட்டு பாக்சிங் மற்றும் தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்ட பிறகுதான் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் தான் பாக்ஸிங் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்கும் படியும் இருந்ததோடு மட்டுமல்லாமல் வியக்க வைக்கும் படியும் இருந்தது என கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் நடிப்பு அபாரமாக இருந்தது என்றால் அதைவிட சுற்றியிருந்தவர்களின் நடிப்பும் வேற லெவல் இருந்தது என்று தான் கூற வேண்டும்
அந்த வகையில் பசுபதி, ஜான் விஜய், கலையரசன், டான்சிங் ரோஸ் சபீர், வேம்புலி ஜான் நடிப்பு உச்சத்தை தொட்டு இருந்தது. திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உச்சத்தை தொடர்களில் ஒருவர் டான்சிங் சபீர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்கு முன்னாடி ரஜினியின் பேட்ட படத்தில் விஜய் சேதுபதிக்கு தம்பியாக நடித்து அசத்தியிருப்பார். இவர் அப்போது இந்த திரைப்படத்தில் என்ட்ரி ஆகும்போது இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு மார்க்கெட்டை பிடிக்க முடியும் என கனவு கண்டாராம் ஆனால் அது அப்போது நடக்க வில்லை ஆனால் தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் நினைவாகி உள்ளதாக கூறப்படுகிறது
என்றால் அந்த அளவுக்கு ஷபிருக்கு டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரம் செம்மையாக கைகொடுத்து அதில் அவரது நடிப்பு வேற லெவல் இருந்தது மேலும் மக்கள் அவரை பற்றி பேசவும் மற்றும் ஆராயவும் தொடங்கியுள்ளனர்.