arya feel sad for acting in pa.ranjith sallpaytta movie: பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். தான் இயக்கிய இரண்டு திரைப்படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று தான் ஒரு முன்னணி இயக்குனர் என நிரூபித்துக் கொண்டார்.
திண்ணையில் படுத்திருந்தவனக்கு திடுக்குன்னு வந்து தான் கல்யாணம், என்ற பழமொழியை போல் வெறும் 2 திரைப்படத்தை இயக்கி விட்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பை தட்டி தூக்கினார்.சூப்பர் ஸ்டார் ரஜினி திரைப்படம் என்றாலே ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த வகையில் கபாலி திரைப்படம் அதனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து காலா திரைப்படத்தை இயக்கி ரசிகர்களுடைய விமர்சனங்களையும் பெற்றார்.
பா ரஞ்சித் திரைப்படம் என்றாலே இப்படி தான் இருக்கும் என ரசிகர்கள் மனதில் பதிய வைத்துவிட்டார், ரசிகர்களிடம் என்னதான் விமர்சனங்களை பெற்றாலும் மீண்டும் அதே தவறை செய்துள்ளார் இதுதான் தற்போது சினிமாவில் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது. பா ரஞ்சித் தற்பொழுது நடிகர் ஆர்யாவை வைத்து சல்பேட்டா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஆர்யா தனது உடலை கரடுமுரடாக ஏற்றி பழனி படிக்கட்டு போல் சிக்ஸ்பேக் வைத்து ஆளே மாறியுள்ளார், இது அனைத்தும் ஆயிஷாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தன் இவர் உடலை அதிரடியாக மாற்றியுள்ளார்.
கொழுகொழுவென அமுல் பேபி மாதிரி இருந்த ஆர்யா இப்போது டிஎம்டி முறுக்கு கம்பி போல் தனது உடலை முறுக்கேற்றி வைத்துள்ளார், இந்த நிலையில் சல்பேட்டா ஷூட்டிங்கில் ஆர்யா கலந்து கொண்டுள்ளார் ஆனால் வழக்கம்போல் பா ரஞ்சித் ஹீரோவான ஆர்யாவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படத்தில் நடிப்பவர்களை ஹீரோவாக காண்பித்துள்ளார்.
பொதுவாக ரஞ்சித் திரைப்படம் என்றாலே ஒரு பத்து பதினைந்து கதாபாத்திரங்களை தனது திரைப்படத்தில் மீண்டும் மீண்டும் நடிக்க வைப்பார் அந்த வகையில் கலையரசன் ஒருவர். இப்படி பா ரஞ்சித் 15 கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனைத்து காட்சிகளையும் எடுத்துள்ளார் அதைப்பார்த்து ஆர்யா நம்மதான் ஹீரோவா என அவரே அவரை கேட்டுக்கொள்வது போல் ஆகிவிட்டது.
அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் அந்த திரைப்படத்தில் இல்லை என அவரே வருத்தப்பட்டுள்ளாராம். புலி திரைப்படத்திற்காக ஆர்யா தனது உடலை கரடுமுரடாக மாற்றி மிகவும் கடினப்பட்டு நடித்துள்ளார் ஆனால் அவரின் கதாபாத்திரம் பெரிதாக படவில்லை எனவும் ஆரியாவின் முக்கியத்துவம் படத்தில் அதிகமாக இல்லை எனவும் மிகவும் வருத்தப் படுகிறாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் பா ரஞ்சித் திரைப்படம் என்றாலே இப்படித்தான் செய்வார் இது உங்களுக்கு தெரியாதா எத்தனை திரைப்படத்தில் பார்த்துள்ளீர்கள் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆர்யா இந்த திரைப்படத்தில் தான் பெரிதாக நம்பியிருக்கிறார் ஏனென்றால் ஆர்யா நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் தான், அதுமட்டுமில்லாமல் ஆர்யா நடித்த சில திரைப்படங்கள் அப்படியே நிற்க்கின்றன அதனால் இந்த திரைப்படத்தை பெரிதாக நம்பி இருந்தார் ஆனால் இப்படி ஆர்யாவிற்க்கு முக்கியத்துவம் அதிகமாக இல்லாதபடி செய்து விட்டார் என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயமாக இருக்கிறது.