சினிமா உலகில் ஒரு படம் சூப்பர் ஹிட் அடிக்க கதைகளதையும் தாண்டி அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் அதே சமயம் அந்த ஜோடி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும்.
அஜித் – நயன்தாரா, விஜய் – நயன்தாரா போன்ற ஜோடிகள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஃபேவரட்டாக இருக்கின்றன. அதே போலவேதான் ஆர்யா – நயன்தாரா ஜோடி எப்பொழுதும் வெற்றி ஜோடியாகவே சினிமா உலகில் பார்க்கப்படுகிறது இவர்கள் இருவரும் இணைந்து ராஜா ராணி திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இப்படி இருக்கின்ற நிலையில் ஆர்யாவுக்கு தங்கையாக நயன்தாரா நடித்தால் அது நன்றாக இருக்குமா என்பது ஒரு கேள்வி குறியாக இருக்க.. ஆனால் அதற்கும் முயற்சித்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி. 2014 ஆம் ஆண்டு அரண்மனை திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
இந்த படத்தில் சுந்தர் சி, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது ஆர்யா மற்றும் நயன்தாரா என கூறப்படுகிறது ஆம் சுந்தர் சி நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும் ஆண்ட்ரியா நடித்த தங்கை கதாபாத்திரத்தில் நயன்தாராவையும்.
நடிக்க வைக்கதான் சுந்தர் சி திட்டம் போட்டுள்ளார் அது நடைபெறவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார் இயக்குனர் சுந்தர் சி. இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.