தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி.இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தளபதி,ரோஜா மற்றும் பாம்பே போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இவரால் நீண்ட காலம் சினிமாவில் நிலைத்து இருக்க முடியவில்லை. இடையில் இவர் சினிமா பக்கம் தலை காட்டாமல் ஆள் அட்ரஸ் இல்லாத அளவிற்கு இருந்து வந்தார். பிறகு சிறிது காலம் கழித்து இவர் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் தன் தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார் என்று தெரியவந்தது .
இந்நிலையில் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்பொழுது அரவிந்த் சாமி தொடர்ந்து வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.
அரவிந்த்சாமி தனது சினிமா வாழ்க்கையில் இரண்டு முக்கிய படங்களின் வாய்ப்பை தவறவிட்டு விட்டாராம். அந்தவகையில் கமல் மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த அன்பே சிவம் திரைப்படத்திலும் கமல் மற்றும் ஜெயராம் நடிப்பில் வெளியான தெனாலி படத்திலும் மாதவன் மற்றும் ஜெயராமுக்கு பதிலாக அரவிந்த்சாமி தான் நடிக்க இருந்தவராம்.
ஆனால் இதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டு அரவிந்த்சாமி இந்த இரண்டு படங்களிலும் நடிக்கவில்லை.இந்த படங்களில் அரவிந்த்சாமி நடித்திருந்தார் தற்போது திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி இருக்கலாம்.