நடிகர் அருண் விஜய் தற்பொழுது தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லனாக மாறி மாறி நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் இவர் கடைசியாக நடித்த யானை படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது அதனை தொடர்ந்து சினம் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வசூல் அள்ளவில்லை இருப்பினும் அருண் விஜய் பாஸிட்டிவாக இருந்து வருகிறார் இப்பொழுது அவரது கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.. இப்பொழுது அதிக பட வாய்ப்புகள் வைத்திருக்கும் அருண் விஜய் சந்தோஷமாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் சிக்கித் தவித்து உள்ளார்.
ஆரம்பத்தில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வி படங்கள் இதனால் வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது ஒரு கட்டத்தில் மனம் உடைந்து போன அருண் விஜய் இனி நாம் படங்களில் நடிக்க வேண்டாம் தயாரிப்பாளராக ஆகிவிடலாம் என நினைத்து விஜய்யை அவரது வீட்டில் போய் சந்தித்துள்ளார். இதை கேட்ட விஜய் உடனே ஷாக்காகி என்ன பிரதர் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டீங்க..
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நீங்க என்னை விட நல்லாவே ஃபைட் பண்றீங்க உங்களை பத்தி தான் நான் அடிக்கடி என்னுடைய பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிக்கிட்டு இருப்பேன் நீங்க ரொம்ப பெட்டர்.. ரொம்ப டவுன் ஆ ஃபீல் பண்ணாதீங்க அது நடக்கும்.. என்னோட கால்ஷீட் கேக்குறீங்க அதைப்பற்றி நான் வேணும்னா அப்பாகிட்ட பேசுறேன் ஆனால் அடுத்தவங்க என்ன சொல்றாங்கன்னு கவலைப்படாதீங்க நிச்சயம்..
நீங்கள் முன்னுக்கு வருவீங்க அந்த திறமை உங்களுக்குள் இருக்கு என ரொம்ப பாசிட்டிவாக பேசி இருந்தார். அதோடு தன்னுடைய புது வீடையும் அருண் விஜய்யை கூட்டிட்டு போய் காட்டி விட்டு அவருடன் காபி குடிச்சிட்டு வழி அனுப்பி வைத்தாராம்.. அதன் பிறகு ஒரு புது எனர்ஜி அருண் விஜய்க்கும் கிடைத்ததாம் நல்ல கதைக்காக வெயிட் பண்ணி நடிக்க ஆரம்பித்தார் தற்பொழுது அவர் உச்ச நட்சத்திரமாக சினிமா உலகில் ஜொலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.