சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஒரு பருவ வயதை எட்டிய பின் ஹீரோவாக நடித்து வந்தவர் அருண்விஜய் இவரை ஹீரோவாக நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் லக் இல்லாத ஹீரோ என அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நல்ல பெயரைப் பெற்றார் அதன்பின் அவருக்கு சினிமாவுலகில் வெற்றி வரத் தொடங்கியது.அருண் விஜய் ஹீரோவாக குற்றம் 24, தடம் போன்ற படங்கள் வெற்றியை ருசிக்க இப்பொழுது வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளன.
முதல் முறையாக ஆக்ஷன் படங்களை கொண்டு வரும் இயக்குனர் ஹரிவுடன் கூட்டணி அமைத்து யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் ஜூன் 14-ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இதுவரை இந்த படத்தில் இருந்து வெளிவந்த ட்ரைலர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2 பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் கொண்டாட வைத்தது.
இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் அருண் விஜய் உடன் இந்த படத்தில் கைகோர்த்து ராதிகா சரத்குமார், யோகி பாபு, சமுத்திரகனி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி உள்ளது ஹீரோயின்னாக பிரியா பவானி சங்கர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அருண்விஜய் இதற்கு முன்பாக 5 கோடி ஒரு படத்துக்கு..
சம்பளமாக வாங்கி வந்த நிலையில் யானை இப்படத்திற்கு தற்போது 7 கோடியாக சம்பளம் வாங்கி உள்ளார் இனி வருகின்ற படங்களில் 7 கோடி தான் சம்பளமாக வாங்கும் என தெரியவருகிறது. ஒவ்வொரு படமும் ஹிட் அடிக்கும் போது சம்பளத்தை உயர்த்துவது வழக்கம் அந்த வகையில் அருண் விஜய் தனது சம்பளத்தை சற்று உயர்த்தி உள்ளார்.