arunraja kamaraj : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு கானா என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இவர் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அதனைத்தடர்ந்து மான்கராத்தே, பென்சில் ரெமோ, மரகத நாணயம், யானும் தீயவன், காத்திருப்போர் பட்டியல், நட்புன்னா என்னன்னு தெரியுமா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பதை தாண்டி பல திரைப்படத்திற்கு பாடல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார், இவர் பீசா, பீசா இரண்டாம் பாகம், ஜிகர்தண்டா, டார்லிங் காக்கி சட்டை, டிமான்ட் காலனி, கடைசியாக தர்பார் மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படத்திற்கும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் சில பாடல்களையும் இவர் பாடியுள்ளார், இந்தநலையில் அருண்ராஜா காமராஜ் தளபதி விஜய்க்கு கதை கூறியதாக தகவல் வெளியானது, தளபதி விஜய்க்கு கூறிய கதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் அருண்ராஜா காமராஜ் அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு தளபதி விஜய் அந்த கதையில் நடிப்பதற்கான சூழ்நிலை வரும் பொழுது நான் கண்டிப்பாக கூப்பிடுகிறேன் என கூறி விட்டாராம், ஏனென்றால் அருண்ராஜா காமராஜ் கூறிய கதை முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதையாகும், அந்த கதையை கேட்டதும் என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டீரகளா என கூறினாராம் விஜய்.
இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் தளபதி விஜய்யிடம் கூறிய கதை பற்றி கூறியதாவது தளபதி விஜய்க்கு கதை சொன்னது ஒரு பெரிய அனுபவமாக இருந்ததாகவும் இந்த வாய்ப்பு பலருக்கு கிடைக்காமல் தத்தளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் அடுத்தமுறை தளபதியை சந்திக்கும் பொழுது எப்பொழுதும் ஷூட்டிங் போகலாம் நண்பா என கேட்கும்படி ஒரு வித்தியாசமான கதையை எழுதிக் கொண்டிருப்பதாக கூறிஉள்ளார் அருண்ராஜா காமராஜ்.
அதுமட்டுமில்லாமல் விரைவில் தளபதியை சந்தித்து கதையைக் கூறும் சூழ்நிலை ஏற்படும் எனவும் கூறியுள்ளார், அருண்ராஜா காமராஜ் அடுத்தகட்டத்தை நோக்கி தமிழ்சினிமாவில் செல்கிறார். அதனால் விரைவில் இவர் முன்னணி இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.