வசூலில் புதிய உச்சத்தை தொட்ட அருண் விஜயின் “யானை படம்” – இதுவரை மட்டும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

yaanai
yaanai

முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் இளம் வயதிலேயே ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனதால் தொடர் தோல்விகளை சந்தித்து சினிமாவில் காணாமல் போனார் இருப்பினும் வருகின்ற ஒன்னு ரெண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தான் என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி வெற்றியை ருசித்தார் அதன் பின் நடிகர் அருண் விஜய்க்கு சினிமா உலகில் அசுர வளர்ச்சி தான். குற்றம் 23, தடம் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் தற்பொழுது அருண் விஜய் கையில் ஏகப்பட்ட திரைப்படம்.

அக்னி சிறகுகள், பாக்சர், பார்டர் சினம் மற்றும் பெரியிடப்படாத ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார் இப்படி அருண் விஜய் ஓடி கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யானை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றிய தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அருண் விஜய் முதல்முறையாக ஆக்சன் இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் யானை இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருந்ததால் அனைவருக்கும் பிடித்த படமாக தற்போது அமைந்துள்ளது இந்த படத்தில் அருண் விஜய் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சமுத்திரக்கனி  மற்றும் பலர் நடித்து அசத்தினர்.

படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தற்பொழுது தகவலும் கிடைத்துள்ளது ஜூலை ஒன்றாம் தேதி வெளியான இந்த படம் இதுவரை சுமார் 25 கோடி வசூல் செய்து உள்ளதாம். வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.