அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த “யானை திரைப்படம்” – இதுவரை மட்டும் தமிழகத்தில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

yaanai
yaanai

கல்லூரி படிக்கும் பொழுது சினிமா உலகில் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர் அருண் விஜய் இருப்பினும் அந்த வயதில் எப்படி கதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி நடிப்பது என எதுவுமே தெரியாமல் நடித்ததால் இவரது பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இருப்பினும் சினிமா உலகில் தனக்கான நேரம் கிடைக்கும் என நம்பி வருகின்ற ஒவ்வொரு திரைப்படங்களில் தனது திறமையை காட்டிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சூப்பராக நடித்தார் அதன் பின் சினிமா உலகில் வெற்றி நாயகனாக மாறத் தொடங்கினார் என்று தான் கூற வேண்டும். அதன்பின் அருண் விஜய் நடித்த தடம், குற்றம் 23 போன்ற திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறின

தற்பொழுது அருண் விஜய் கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இருக்கின்றன பாக்சர், சினம், அக்னி சிறகுகள், பார்டர் என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இருக்கின்ற நிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் யானை.

இந்த திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்ததால் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளியது. இப்படி இருக்கின்ற நிலையில் யானை திரைப்படம் தற்பொழுது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

ஜூலை ஒன்றாம் தேதி வெளியான யானை திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே தற்போது வரை சுமார் 18.5 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் இந்த திரைப்படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது இந்த படத்தை எதிர்த்து பல படங்கள் வெளியாகினாலும் இந்த படத்திற்கான வரவேற்பு இன்னும் ஜோராக இருக்கிறது.