என் வீட்டுப் பிள்ளைக்கு குண்டுமணி அளவுக்கு கொர வந்துச்சு.. உன் குலத்தையே கருவறுத்திட்டு போயிட்டே இருப்பேன்.! மிரட்டலான அருண்விஜயின் யானை வீடியோ…

arun vijay
arun vijay

தமிழ் சினிமாவில் என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் அருண் விஜய் இவர் அஜித் உடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. கடைசியாக இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், பார்டர்  என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் ஹரி இயக்கத்தில் யானை திரைப்படத்திலும் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன்  தயாரித்து வருகிறது அருண் விஜய் திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு கூக் வித் கோமாளி புகழ் அம்மு அபிராமி பிரகாஷ்ராஜ்  கேஜிஎப் புகழ் கருடா ராம்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது வருகின்ற ஜூலை 1ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதனால் படத்தில் இருந்து சில அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படக்குழுவெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.