2 – வது வாரத்தை தொட்ட அருண் விஜயின் “யானை படம்” – இதுவரை மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

yaanai-
yaanai-

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு திரைக்கதையை இயக்குவதில் ரொம்ப கைதேந்தவராக இருப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் ஹரி சினிமா பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரையிலும் ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இவரது படத்தைப் பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இயக்குனர் ஹரி வேல், வேங்கை, சிங்கம், சாமி, சாமி ஸ்கொயர் போன்ற பல ஆக்சன் படங்களை கொடுத்து அசதியுள்ளார் தற்பொழுது கூட இவர் நடிகர் அருண் விஜய் உடன் முதல் முறையாக இணைந்து யானை திரைப்படத்தை உருவாக்கியிருந்தார்.

இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சமுத்திரக்கனி, புகழ் மற்றும் பல பிரபலங்கள் நடித்தனர். இந்த படம் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்களை வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்து உள்ளது.

மேலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து வருவதால் நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூலும் கணிசமாக உயர்ந்து உள்ளது இதுவரை யானை திரைப்படம் இரண்டு வாரத்தை தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை அருண் விஜயின் யானை திரைப்படம் சுமார் 15 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகின்றது.

யானை படத்தை எதிர்த்து பல்வேறு திரைப்படங்கள் ஒரே நாளில் வந்தாலும் யானை படத்திற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் நன்றாகவே இருக்கிறது அதனால் இன்னும் நல்ல வசூல் வேட்டை அள்ளும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.