சூர்யாவிடம் தனது யானை பலத்தைக் காட்ட துடிக்கும் அருண் விஜய்..! சபாஷ் சரியான போட்டி..!

surya

தமிழ் சினிமாவில் மிகப் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாண்டியராஜ் இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இவ்வாறு இந்தக் கூட்டணி ஆனது இதற்கு முன்பாகவே பசங்க 2 திரைப்படத்தில் ஒன்றாக இணைந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா பாண்டிராஜ் உடன் மறுபடியும் கூட்டணியில் அமைந்துள்ளது இந்த திரைப்படத்தில் தான் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

etharkkum thuninthavan-1
etharkkum thuninthavan-1

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு போட்டியாக அருண் விஜய்யின் யானை திரைப்படமானது திரையரங்கில் வெளியாக உள்ளது. அருண் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தை ஹரி இயக்கிய அதுமட்டுமில்லாமல் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் ஜி வி பிரகாஷ் இசையில் வெளிவருவதற்கு காரணமாக கண்டிப்பாக பாடல்கள் கிடைக்கும் என்பது தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் மற்றும் யானை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதன் காரணமாக யார் வெற்றி பெறுவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

yanai-1