பற்றி எரியும் பீடாவை லபக்கென விழுங்கிய அருண் விஜய் வைரலாகும் வீடியோ.!

arun vijay-tamil360newz
arun vijay-tamil360newz

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தன்னுடைய வெற்றி திரைப்படத்திற்காக பல வருடங்களாக போராடி வந்தார், ஆனால் தற்பொழுது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

ஆரம்பத்தில் அருண் விஜய் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் சமீபகாலமாக இவர் கதையை தேர்ந்தெடுக்கும் வித்தையை கற்றுக் கொண்டு தற்போது நடிக்கும் திரைப்படங்களை வெற்றி படங்களாக மாற்றி வருகிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக 144 தடை விதிக்கப்பட்டு அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள் அதேபோல் சினிமா பிரபலங்களும் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள், இந்தநிலையில் வீட்டிலேயே இருக்கும் அருண் விஜய் ஜிம் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய ஃபிட்னஸ் தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டிலேயே இருக்கும் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொழுந்துவிட்டு எரியும் பயர் பீடாவை அப்படியே முழுங்கி உள்ளார், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி பீடவுடன் நெருப்பை விழுங்கி விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.