அருண் விஜய் நடிக்கும் பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பட குழு.!

border
border

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் அருண் விஜய் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்கலும் சில ஆண்டுகளாக சரிவர ஓடாமல் இருந்து வருகிறது. அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு வில்லனாக என்ட்ரி கொடுத்தார் இவருடைய அந்த கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அருள் விஜய்க்கு வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.

அதனைத் தொடர்ந்து அருண் விஜய் அவர்கள் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த தமிழ் ராக்கர்ஸ், மற்றும் சினம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது பார்டர் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் அருண் வெங்கடாசலம் இயக்குகிறார் ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் இறுதி கட்டப்பனைகள் தற்போது முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான சினம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது அதனை அடுத்து தற்போது பார்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் தற்போது ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது பார்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என பட குழு போஸ்டர் உடன் தற்போது அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவித்த நிலையில் சில காரணங்களால் படம் வெளிவராமல் தள்ளி போனது இதை அடுத்து அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தனர் ஆனால் அப்போதும் வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.