தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை விடவும் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தவர் நடிகர் அருண்விஜய். இவர் வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமானாலும் பலர் இவரை ஏளனம் பார்த்து வந்தார்கள். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்களும் தொடர்ந்து தோல்வியை தழுவியது.
இப்படி பட்ட நேரத்தில் அருண் விஜய் ஒரு காலத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் இருந்து வந்தது.இந்நிலையில் தான் இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதன் பிறகு ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் அறிமுகமாகிய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மற்றவர்கள் தன்னை ஏளனம் செய்கிறார்கள் என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது விடாமுயற்சியோடும், கடின உழைப்பினாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இதன் காரணமாக இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
தற்பொழுது இவர் அறிவழகன் உருவாக்கிவரும் பார்டர் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்தவகையில் இத்திரைப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக ஹோட்டலில் நடைபெற்ற முடிந்தது.
ஹோட்டலை மிகவும் பிரமாண்டமாக அலங்கரித்து இருந்தார்கள் இதுவே தியேட்டர் மாதிரி மிகவும் பெருசாக அழகாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது .இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக படேல் ஒரு புதுமுக நடிகை நடித்து வருகிறார். அந்த வகையில் அருண் விஜய் நடிகை படேல் மீது சாய்த்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.