Sinam 2nd Look Poster : நடிகர் அருண்விஜய் முன்னணி நடிகர்களின் அந்தஸ்தை பெறுவதற்காக நீண்டகாலமாக போராடி வந்தவர் ஆவார் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். பிறகு இவர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து மாபியா என்ற திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை, இதனால் அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என படத்தின் முடிவில் ட்விஸ்ட் வைத்திருந்தார்கள்.
சமீபகாலமாக அருண்விஜய் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்று வருகின்றன இந்த நிலையில் அருண் விஜய் அடுத்ததாக காவல்துறை அதிகாரி வேடத்தில் சினம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சினம் திரைப்படத்தை சி என் ஆர் குமாரவேலன் இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இந்த போஸ்டரில் அருண்விஜய் போலீஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் மிகவும் மாசாக போஸ் கொடுத்துள்ளார், அருண் அஜய் சமீபகாலமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் அருண் விஜய் இன்னும் அக்னி சிறகுகள், பெயரிடாத படங்கள் என சில திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.