இந்த இயக்குனரின் படத்திற்காக புதிய கெட்டப்பில் வளம் வரும் அருண் விஜய்.? அப்போ படம் வேரலேவேல்.

boxer arun vijay

தமிழ் சினிமாவுலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்,நடிகைகள் பல பிரபலங்ககள்  சினிமா உலகில் அவ்வளவு எளிதில் நடிகர், நடிகை என்ற பட்டத்தை பெறுவது அவ்வளவு இயல்பான காரியம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஏனென்றால் சினிமா உலகில் பல நட்சத்திரக் குழந்தைகள் சினிமா உலகில் நடித்திருந்தாலும் பின்னாட்களில் ஹீரோவாக தனது நடிப்பை தொடர முடியாமல் சினிமாவை விட்டே வெளியேறி உள்ளனர். அருண் விஜய் அவர்களே இளம் வயதில் இருந்து தற்போது வருடம் தனது விடா முயற்சியின் மூலம் சினிமா உலகில் பணியாற்றி வருகிறார் இவர் இளம் வயதிலேயே சினிமாவிற்குள் வந்து பிறகு ஹீரோவாக மாறினார்.

இளம் வயதிலேயே சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனதால் சிறிது காலம் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தல அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை மிகச்சரியாக பயந்தினார்.என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் இவர் நடித்த குற்றம் 23,தடம் ஆகிய படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இப்படத்தினை தொடர்ந்து தற்போது மாபியா படம் சிறப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரையரங்கில் வெளிவந்து சரியாக ஓடவில்லை.

ஆனால் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.  தற்போது அவர் சீனம் என்ற திரைப் படத்தின் டப்பிங் பணிக்காக புதிய கெட்டப்பில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தற்பொழுது அந்த புகைப்படம் சமூக வலதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் அருண் விஜய் அவர்கள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் அத்திரைப்படத்திற்காக இது போன்ற கெட்டப்பில் இருக்கிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் இது குறித்து சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை இருப்பினும் அத்தகைய புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

arun vijay
arun vijay