அருண் விஜய் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடையவில்லை என்றாலும் தனது விடா முயற்சியினால் அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை தனது பக்கம் தலை திரும்ப வைத்தார்.
இவர் நடித்திருந்த பாண்டவர்பூமி, முத்தம், இயற்கை, தவம், வேதா, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க, என்னை அறிந்தால், குற்றம் 23, செக்க சிவந்த வானம் போன்ற திரைப்படங்களில் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக பல நடிகர்கள் நடிகைகள் தீபாவளியைக் கொண்டாடி அதை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்திருந்தார்கள்.
அதைப்போல் அருண் விஜய்யும் தீபாவளி ஸ்பெஷலாக தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அவரது மனைவி அவரது மகன் மகள் என குடும்பத்துடன் எடுத்த புகைப்படமாக இருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அருண்விஜய்க்கு இப்படி ஒரு மகளா என்று இணையதளத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் அருண்விஜய்க்கு இப்படி ஒரு அழகான மகள் இருக்கிறாரா இது தெரியாமல் போச்சு என்றும் கூறிவருகிறார்கள்.
May there be hope,
May there be joy,
May there be prosperity!
Happy Diwali!!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! pic.twitter.com/1qXAMDKOLX— ArunVijay (@arunvijayno1) November 14, 2020