தமிழ்சினிமாவில் பாலிவுட் சினிமாவைப் போல் வாரிசு நடிகர்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் பல வாரிசு நடிகர்கள் தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய், சிம்பு, அருண் விஜய், சாந்தனு பாக்கியராஜ், கௌதம் கார்த்திக் என பல நடிகர்களை கூறிக் கொண்டே போகலாம்.
என்னதான் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் அந்த வகையில் வாரிசு நடிகராக வலம் வந்த அருண் விஜய் தன்னுடைய திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இவர் 20 வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும் ஹிட் திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வந்தார். அதன்பிறகு அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்தத் திரைப்படத்தில் தனது உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டினார் அன்றிலிருந்து இன்று வரை தனது உடலை மிகவும் அக்கறையுடன் பராமரித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் அருண்விஜய் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இவர் ஆர்த்தி மோகன் என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவருக்கு பூர்வி என்ற மகளும் அர்ணவ் என்ற மகனும் இருக்கிறார்.
With all your support and unconditional love #ProductionNo8 begins today!@Suriya_offl #ActorVijayakumar @arunvijayno1 #MasterArnavVijay @rajsekarpandian @srbabu742 @SarovShanmugam @gopinathdop @nivaskprasanna @amaranart @megha81053183 #VinothiniPandian pic.twitter.com/y1wKogI0I2
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 14, 2020
அருண் விஜய்யின் மகனுக்கு தற்பொழுது ஒன்பது வயதாகும் அவர் கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பவர். அப்படியிருக்கும் நிலையில் விரைவில் சினிமாவில் களம் இறங்கயிருக்கிறார் அருண் விஜய்யின் மகன். அதுவும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் தான்.
இந்த திரைப்படத்தை சாரோ சண்முகம்இயக்குகிறார் அவர் கூறுகையில் ஆர்னவ் விஜய்யை திரை உலகிற்கு அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இந்த திரைப்படம் ஒரு சிறுவனுக்கும் ஒரு நாய் குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் திரைப்படமாகஅமையும் . இதன் மொத்த கதையும் ஊட்டியில் தான் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அருண் விஜய்யின் மகனுக்கு கூத்துப்பட்டறையில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அருண் விஜயின் மகனைப் பற்றி பலருக்கும் தெரியும் ஆனால் அவரின் மகளை பற்றி பலருக்கும் தெரியாது இந்த நிலையில் அவரின் மகள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.