கண்ணுக்குத் தெரியாத வில்லனை துரத்தி ஓடும் அருண் விஜய் – “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸ் டீசர்.!

arun vijay
arun vijay

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சுமாராக இருந்ததை அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க  ஆக்சன் இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய்.

முதல் முறையாக கூட்டணி அமைத்து யானை திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து  பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி,  ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.

யானை திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த படம் இதுவரை மட்டுமே ஏழு கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நாட்களிலும் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் கையில் சினம், பாக்சர், அக்னி சிறகுகள், பார்டர் மற்றும் பல பெயரிடப்படாத படங்கள் பலவற்றில் கமிட்டாகி உள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அருண் விஜய் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தற்பொழுது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதில் அருண் விஜய் முழுக்க முழுக்க தனது சிறந்த நடிப்பு மற்றும் ஆக்சனை வெளிப்படுத்தியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் டீசரை..