நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் பெரும்பாலும் ஆக்ஷன் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் நடிப்பில் வெளியாகிய தடையற் தாக்க குற்றம் 23 தடம் ஆகிய திரைப்படங்கள் அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.
நடிகர் அருண்விஜய் விஜயகுமாரின் மகன் ஆவார், சினிமா பின்புலத்திலிருந்து வந்து இருந்தாலும் அருண் விஜய் தனது விடாமயற்சியால் தான் இந்த இடத்தை பிடித்துள்ளார், அருண் விஜய் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள நீண்டகாலமாக போராடி உள்ளார். சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகிய மாபியா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அதேபோல் மாபியா திரைப்படம் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும் என முதல் பாகத்திலேயே அறிவித்துவிட்டார்கள், அதனால் மாபியா இரண்டாம் பாகம் வந்தால் தான் கதை புரியும் என சிலர் கூறுகிறார்கள், இந்த நிலையில் அருண்விஜய் இந்த கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன்.
பிரபல ஆக்ஷன் இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தை முன்புறமாக போய்க்கொண்டிருக்கிறது.
ஹரி அடுத்ததாக சூர்யாவின் அருவா திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஆனால் அந்த திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பு அருண் விஜய்யின் திரைப்படத்தை முடித்துவிடலாம் என மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் ஹரி.