பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ஹரி. இவர் சாமி,சிங்கம்,வேல்,ஆறு போன்ற பல ஹிட் படங்களை தொடர்ந்து சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அருண் விஜய்யின் 35வது திரைப்படத்தை ஹரி இயக்க உள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்பொழுது 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.
தற்பொழுது இவர் அருண் விஜய்க்கு ஜோடி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ஹரி இயக்கும் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா,தலைவாசல் விஜய் , குக் வித் கோமாளி புகழ், அம்மா அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.
இதோடு இப்படத்தை ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் கே.ஏ சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இவ்வாறு பிரம்மாண்ட கூட்டணியாக இணைந்து உள்ளார்கள் எனவே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான வரவேற்பு மிகுதியாக உள்ளது.
இந்நிலையில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அவ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் இயக்குனர் ஹரி அருண்விஜய் விஜயகுமார் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் உள்ளார்கள்.